தரவுத்தளம் பற்றி

இலங்கை நகரங்களின் நிலை - தரவுத்தளம்

இந்த தரவுத்தளமானது இலங்கை நகரங்களின் நிலை 2018 எனும் தலைப்பில், தகவல்களை மேம்படுத்துதல் மற்றும் அதன் பகுப்பாய்வான ஆதாரங்கள் அடிப்படையிலான கொள்கைகள், ஒருங்கிணைந்த நகரத்திட்டமிடல்,  அதே போல் தனியார், பொதுத்துறை முதலீடு என்பவற்றை ஊக்குவிக்கும் அறிவிப்பாக அமையும் நோக்கத்தைக் கொண்ட திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றது.

இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கமாக காணப்படுவது, இலங்கையின் மாநகராட்சி பகுதிகளின் அதிகரித்த பொருளாதார வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் மீண்டு வரக்கூடிய திறன் (மீள்திறன் ); நகர்ப்புற பண்புகள் மற்றும் நகர்ப்புற வறுமை குறைப்பு; வாழ்வதற்கு உகந்த இடவசதிகளை கொண்டிருக்கின்ற நகர்ப்புற மையங்களாக மாற்றுதல் என்பனவாகும். இதற்காக இலங்கையின் ஒன்பது மாகாணங்களின் தலை நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பில், கொழும்பு மாநகரத்தின் வர்த்தக தலைநகரத்திற்கு மேலதிகமாக, அதன் நிர்வாக தலைநகரமான ஜெயவர்தனபுர கோட்டை மாநகரம், அதனை அண்மித்த தெஹிவளை  -கல்கிஸ்ஸ நிர்வாக மாநகரம் ஆகியன கொழும்பு நகர் பற்றிய சிறந்த விளக்கம் ஒன்றினை ஒட்டு மொத்தமாக பெற்றுக்கொள்வதற்காக ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன.

இலங்கை நகரங்களின் நிலை தொடர்பான அறிக்கை-யினை  தயாரிப்பதற்காக திட்டத்துடன் தொடர்புடைய தகவல்கள்,  அதனுடன் இணைந்த மேம்படுத்தப்பட்ட வரைபடங்கள், தரவுத்தளங்கள் என்பன ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இவ் அறிக்கையானது ஒட்டு மொத்த இலங்கை தீவில் பிரதான மனித குடியேற்றங்களின் நகரமயமாக்கல் நிலவரத்தின் சாராம்சத்தை வழங்குகின்றது. அத்துடன் இந்த அறிக்கை, நகர அடிப்படையிலான தரம் மற்றும் எண்ணிக்கை அடிப்படையிலான தரவுகள், இலங்கையின் ஒன்பது மாகாணங்களின் தலைநகரங்களிலுள்ள முக்கிய தேசிய, மாகாண மற்றும் மாநகரங்களில் நிலவிய நகர்ப்புற அபிவிருத்தி தொடர்பான  பிரச்சினைகளை ஆராய்வதற்காக நடாத்தப்பட்ட விசேட ஆய்வுகளையும்   உள்ளடக்கியுள்ளது.

SoSLC publication

இந்த அறிக்கையானது தரவுகள் மற்றும் பகுப்பாய்வுகளுடனான 10 அத்தியாயங்களை உள்ளடக்கியது.இது இலங்கையின் தலைநகரங்களின் விரிவான துறைசார் மதிப்பீடுகளை வழங்கவும் ,ஒருங்கிணைக்கப்பட்ட கொள்கை பகுப்பாய்வுகளை முன்வைக்கவும் உதவுகிறது .இதனுடாக இவ்வறிக்கையானது தனது பிரதான இலக்காக ஆதாரபூர்வனமான நகர்ப்புற கொள்கை மற்றும் நாட்டின் நகர்ப்புற மையங்களின் சமூக பொருளாதார அபிவிருத்தியை திட்டமிடுதலில் ஆதரவு செலுத்துவதை இலக்காக கொண்டுள்ளது .

இவ்வறிக்கை ஐ.நா வதிவிடத்தினால் (UN-Habitat) உருவாக்கப்பட்ட செயல்முறை மூலம் இலங்கையின் பிரதான நகரங்களின்  நிலவரங்களை ஆராய்தல் மற்றும் நாட்டின் நகர்ப்புற வளர்ச்சியில் ஒட்டு மொத்த போக்குகளை முன்னிலைப்படுத்தல் ஆகியவற்றை வரைகிறது .மேலும் இந்த அறிக்கை நிலப்பயன்பாடு மற்றும் நகர்ப்புற விரிவாக்க முறைமைகள் பற்றி விளக்குவதற்கு அண்மைய செயற்கைகோள் படங்களை பயன்படுத்தியுள்ளது.அத்துடன் புள்ளிவிபரவியல் தரவுகள் , ஆய்வுகள்  ,உள்ளூர் பங்குதாரர்களுடனான நகர பயிற்சி பட்டறைகள் என்பனவும் தகவல்களை திரட்டும் ஊடகங்களாக இவ்வறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் ஒன்பது மாகாணங்களின் தலைநகரங்களின் விரிவான இந்த பகுப்பாய்வுகளில், அனுராதபுரம் (வடமத்திய மாகாணம் ), பதுளை (ஊவா மாகாணம் ), யாழ்ப்பாணம் (வட மாகாணம்),  கண்டி (மத்திய மாகாணம் ), குருநாகல் (வட மேல் மாகாணம் ), இரத்தினபுரி (சப்ரகமுவா மாகாணம் ), திருகோணமலை (கிழக்கு மாகாணம் ) அத்துடன் மேல் மாகாணம் மற்றும் நாட்டின் தலைநகரமாகிய கொழும்பு ஆகியன விரிவாக பகுப்பாயப்பட்டுள்ளன .

அனைத்து இலங்கையருக்குமான சிறந்த நகர்ப்புற எதிர்காலத்தை குறிக்கோளாக கொண்டு இந்த அறிக்கை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை நடைமுறைப்படுத்தல், புதிய நகரங்களுக்கான நிகழ்ச்சித்திட்ட நிரல், அதேபோல இலங்கை அரசின் முக்கிய மூலோபாய அவணங்களையும்  இவ்வறிக்கை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. இலங்கை நகரங்களின் குறிக்கோள்களானது போட்டித்தன்மை (competitiveness) , உள்ளுணர்வு(inclusivity) , மீள்திறன் ( resilience) , பாதுகாப்பு (safety)  மற்றும் நிலைத்திருக்கும் தன்மை (sustainability ) ஆகிய 05 பிரதான அம்சங்களை கொண்டுள்ளது. இந்த பிரதான அம்சங்களே பின்வரும் அத்தியாயங்களில் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.

ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட கொள்கை முறைமையை வழங்குவதன் மூலம் இவ் அறிக்கை நிறைவு பெறுகிறது. இந்த முறைமை , கொள்கை வகுப்பாளர்களுக்கு துறைசார் கொள்கைகளை அடையாளங்கண்டுகொள்ள எதுவான மாதிரி வடிவம் ஒன்றை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இது பல்வேறு துறைசார் பிரிவுகளில் காணப்படும் தடைகளை அகற்றவும், சகல இலங்கையர்களுக்கும் சிறந்த நகர்ப்புற  எதிர்காலத்தை  நோக்கி பயணிக்கவும் வழிகோலும் .

ஆன்லைன் தரவுத்தளம்

இரண்டாவது வெளியீடு “SoSLC தரவுத்தளம்” ஒரு மையப்படுத்தப்பட்ட தரவுத்தளத்தை வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது நகர்ப்புறத் திட்டத்தில் சான்றுகள் அடிப்படையிலான முடிவெடுப்பதை மேம்படுத்துவதில் முக்கியமானதாக இருக்கும். தரவுத்தளம் என்பது ஒரு இடஞ்சார்ந்த இடைமுகத்தின் மூலம் தகவல்களைக் காண்பிக்கும் மற்றும் புள்ளிவிவர தரவுகளால் ஆதரிக்கப்படும் ஒரு தளமாகும். இந்த தரவுத்தளத்தின் அடிப்படை தகவல் அறிக்கையில் பயன்படுத்தப்பட்ட தரவு.
இந்த தரவுத்தளம் முதன்மையாக அரசாங்க அதிகாரிகளால் புதுப்பிக்கப்படும் மற்றும் தரவுத்தள போர்ட்டலின் ஒரு பகுதி பொதுமக்களுக்கு திறந்திருக்கும். தரவுத்தளம் துல்லியமான நகர தரவு மற்றும் தேசிய அளவிலான தரவை சேமிப்பதற்கான தளமாக செயல்படும். சேமிக்கப்பட்ட தரவை பொதுமக்கள் குறிப்பிடவும், பதிவிறக்கம் செய்யவும், கருத்துத் தெரிவிக்கவும், புதிய தரவை மேம்படுத்தவும் சேர்க்கவும் வழங்கப்படும் பரிந்துரைகள். அதிகாரிகளும் முடிவெடுப்பவர்களும் முக்கியமான தரவைச் சேமிக்க முடியும், அவை வெவ்வேறு வரையறுக்கப்பட்ட முன் அணுகல் உரிமைகளைக் கொண்டிருக்கும்.
தரவுத்தளத்தைப் பயன்படுத்துவது குறித்த பயிற்சி அனைத்து நகரங்களுக்கும் வழங்கப்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கம், பொறுப்பு மற்றும் பயனர் பாத்திரங்களைப் பொறுத்து வெவ்வேறு நிலைகளை குறிவைக்கிறது. ஏற்றுக்கொள்ளப்பட்ட தரத்தை பூர்த்தி செய்யும் வழக்கமாக புதுப்பிக்கப்பட்ட நகர குறிப்பிட்ட தரவுகளுடன் தரவுத்தளத்தை பராமரிக்க அனைத்து நகரங்களும் ஊக்குவிக்கப்படுகின்றன.

 

பயிற்சி கையேட்டை இங்கே பதிவிறக்கவும் ...

சின்னம்

SoSLC திட்டம் லோகாவில் உள்ள நகரங்கள் மற்றும் நகரமயமாக்கல் வடிவங்களை பிரதிநிதித்துவம் செய்கிறது, மக்களை, நகர்ப்புற சுற்றுச்சூழல் கணக்கில் கணக்கில் கொள்கிறது. சிட்டிப்பகுதிகளில் உள்ள போக்குவரத்து இணைப்புகளும் அதேபோல இணைக்கப்படும் நகரங்களும் ஒன்றோடொன்று இணைக்கின்றன. இது Point Pedro இலிருந்து டன்ட்ரா வரை இயக்கப்படும் சிதறடிக்கப்பட்ட கோடுகளுடன் குறிப்பிடப்படுகிறது.
ஒவ்வொரு வண்ண குறியீடும் அந்தந்த SDG நிறங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, ஏனெனில் கட்டிடங்களில் உள்ள தங்க எலுவ் கோலர் SDG11 ஐ ஆதரிக்கிறது, இது நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்களுக்கானது. சிவப்பு நிற ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் மக்கள், SDG5 ஐப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர், இது பாலின சமபங்குக்குரியது. சுண்ணாம்பு பச்சை மற்றும் நீல வண்ணங்கள் நிலம் மற்றும் வாழ்க்கை வயிற்று நீர் வாழ்க்கை பிரதிநிதித்துவம் (SDG 15 மற்றும் SDG 14).

சின்னம்
இலங்கை அரசு

SoSLC திட்டத்தில் உள்ளாட்சி, மாகாண சபைகள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் இலங்கை அரசு குறிப்பிடப்படுகிறது

இலங்கை அரசு
நிதியுதவி

ஆஸ்திரேலிய அரசு (DFAT) நிதியுதவி அளி SoSLC
திட்டத்திற்குத்ததுடன் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கியது.

 

நிதியுதவி
மூலம் செயல்படுத்தப்பட்டது

ஐக்கிய நாடுகளின் மனித தீர்வுத் திட்டம் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப பங்காளியாகும் மற்றும் அறிக்கையின் உற்பத்தி, தரம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றிற்கு பொறுப்பாகும்.

 

மூலம் செயல்படுத்தப்பட்டது
UNDP

UNDP, Capacity Development of Local Government Project (CDLG) is parther with SOSLC for main 4 provinces in Sri Lanka. (North Central, Northern, Eastern and Uva)

UNDP
பங்குதாரர்கள்

உள்ளாட்சி அதிகாரிகளின் பயிற்சி அதிகாரிகளுக்கு இலங்கை உள்ளாட்சி நிர்வாக நிறுவனம் பொறுப்பாகும்.

 

பங்குதாரர்கள்
பங்குதாரர்கள்

ஆசியா அறக்கட்டளை என்பது ஒரு இலாப நோக்கற்ற சர்வதேச மேம்பாட்டு அமைப்பாகும், இது ஒரு மாறும் மற்றும் வளரும் ஆசியா முழுவதும் வாழ்க்கையை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளது.

பங்குதாரர்கள்